web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தனிநபரின் சுதந்திரத்தை மீறியதாக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு

[ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட், 2012, ]
தனிநபரின் சுதந்திரத்தை
தனிநபர் சுதந்திர விதிமுறையை மீறி விளம்பர குக்கீஸ்களை இடம் பெறச் செய்த கூகுள் நிறுவனத்திற்கு அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் அமெரிக்க டொலர் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை “ஆப்பிள் வெப் பிரவ்சர்” கணனிகளில் கூகுள் நிறுவனத்தின், டபுள் கிளிக்(Double Click) என்ற விளம்பர "ட்ராக்கிங் நெட்வொர்க்"(Tracking Network) வசதி, தாமாக இடம் பெற்றிருந்தது.

கணனி பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கு மாறாக இந்த வசதியை இடம் பெறச் செய்ததன் மூலம், தனிநபர் சுதந்திர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது புகார் சுமத்தப்பட்டது.

இந்த விதிமீறலுக்கான அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அமெரிக்க தலைமை வர்த்தகக் கமிஷன் உத்தரவிட்டது.

கூகுள் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு, அபராதத் தொகையை செலுத்த முன்வந்துள்ளதாக அமெரிக்க தலைமை வர்த்தக கமிஷன் நேற்று தெரிவித்தது.

மற்ற நிறுவனங்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தோம் என அமெரிக்க வர்த்தக கமிஷன் தலைவர் ஜான் லீபோவிட்ஸ் கூறினார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சுவாரஸ்யமான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்  (25/05/2013) 
  கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது  (23/05/2013) 
  இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!  (21/05/2013) 
  20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை   (21/05/2013) 
  உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்  (20/05/2013) 
Published news:
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013)
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013)
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013)
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013)
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)
  புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க  (08/05/2013)