![]() |
மறைப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை! சர்வதேசத்திடம் சரணாகதியடைந்த மஹிந்தர் | ||
| [ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட், 2012, ] | ||
மறைப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை. மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதா என்பதை சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்க்கட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மனித உரிமை தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறும் பொய்களை சர்வதேச சமூகம் நம்பக் கூடாதெனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, உண்மை நிலையை நேரில் வந்து கண்டறிய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, துப்பாக்கி ஏந்தி போரிட்ட பயங்கரவாதிகளையும் மன்னித்து புனர்வாழ்வளித்துள்ள நாம் ஒருபோதும் பழிவாங்கும் நோக்கமுடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார். அத்துடன் பொதுமக்களின் வாக்குகளைப் பெற புதிய வாக்குறுதிகளை வழங்கத் தேவையில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டே மக்கள் முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் உட்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த முப்பது வருட காலயுத்தத்தின் போது மக்கள் பட்ட கஷ்டங்கள் துன்பங்களை நாம் அறிவோம். அத்தகைய கொடூரமான யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்து பாரிய அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்கியே மக்கள் முன் வந்துள்ளோம். மனித உரிமை தொடர்பாக உலகம் எம்மீது விரல் நீட்டுகிறது. நாம் அவர்களுக்குக் கூறுவதெல்லாம் இங்கு நேரில் வந்து பாருங்கள் என்பதே. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் டொலர்களுக்காகக் கூறும் பொய்களை நம்ப வேண்டாம். எமக்கு ஒளிப்பதற்கு எதுவுமே இல்லையென நாம் அவர்களுக்குக் கூறுகின்றோம்.என்றார். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் (17/05/2013)
|
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
|
Published news: |
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|


வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!









