web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

செல்வி ஜெயலலிதாவை ஆபாசப் பொம்மைபோல வரைந்து சிங்களவர்கள் ஆர்பாட்டம் !

[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர், 2012, ]
செல்வி ஜெயலலிதாவை ஆபாசப்
இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (06) கொழும்பு புறக் கோட்டை பகுதியிலுள்ள கடைகள் சில, மூடப்பட்டது. பின்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று அங்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழ் நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து(அவர் ஜாக்கெட்டோடு மட்டும் நிற்பதுபோல) அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக கொண்டு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சிங்களவர்கள். இதேவேளை இவர்கள் இந்திய வம்சாவெளி வியாபாரிகளையும் மிரட்டி இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர்.

நேற்றைய தினம் விமல் வீரவம்ச தெரிவித்த கருத்துக்களும் , தமிழ் வியாபாரிகளைக் குறிவைத்து வெளியிடப்பட்டதாககும்.

நாங்கள் திருப்பி அடித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று விமல் வீரவம்ச குறிப்பிட்டிருந்தது, இந்திய வம்சாவெளி வியாபாரிகளைத் தான். இதன் காரணமாகவே சில தமிழர்களும் இன்றைய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என மேலும் அறியப்படுகிறது.

இலங்கை இராணுவம் போரின் போது பல தமிழ் பெண்களை மானபந்தப் படுத்தியது. போர் மரபுகளை மீறி இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை உருவி அவர்களை அவமானப்படுத்தியது. இதே பாணியில் இன்று சிங்களவர்களும், செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து அதனை, தூக்கிக் காட்டி, ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இது கண்டிக்கப்படவேண்டிய விடையம் ஆகும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
  வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!  (20/05/2013) 
  வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்   (20/05/2013) 
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
Published news:
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)