web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

அட, ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் அடைந்துவிடுவேன்: சீமான் பேட்டி

[ சனிக்கிழமை, 15 செப்ரெம்பர், 2012, ]
அட, ஐ.நா.வில் அரை மணி நேரம்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் அரை மணி நேரம் பேசவிட்டால் தம்மால் தனி நாடு அடைந்துவிட முடியும் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் வார இதழுக்கு சீமான் அளித்திருக்கும் பேட்டியில் கூறியுள்ளதாவது:

கேள்வி: 'சரி... நீங்கள் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள்?''

பதில்: ''பிரதமராவது என் கனவல்ல. ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.''

கேள்வி: ''அடிப்படையில் உங்கள் இயக்கத்தின் இலக்குதான் என்ன?''

பதில்: ''இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை!''

கேள்வி: ''ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் உங்கள் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா?''

பதில் : ''இல்லை. ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்துபோவதற்கான காரணங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று மட்டும் சொல்வேன். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசத்தின் மீது எப்படி வரும் எனக்கு நேசம்?''

கேள்வி: ''தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?''

பதில்: ''அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்! என்று கூறியுள்ளார்.

அப்புறம் எதுக்கு புரட்சி? ஆயுதம்? போராட்டம்? இல்லைங்கண்ணா.....

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013) 
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013) 
  ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது   (18/05/2013) 
  மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!   (18/05/2013) 
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013) 
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013) 
Published news:
  மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா?  (12/05/2013)
  காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம்   (12/05/2013)
  மனைவியை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கணவன்   (11/05/2013)
  பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ கிளிப்பிங்குகளைக் காட்டிய பள்ளிக்கூட வேன்   (10/05/2013)
  பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய வேன் டிரைவர் கைது   (10/05/2013)
  கோடம்பாக்கத்தில் பரபரப்பு கழுத்தை நெரித்து மனைவி கொலை  (09/05/2013)