![]() |
தனது 17 வயது காதலிக்காக கைக்குண்டை வெடிக்கவைத்த இராணுவச் சிப்பாய் ! | ||
| [ புதன்கிழமை, 19 செப்ரெம்பர், 2012, ] | ||
என்ன கொடுமை சரவணா ! என்று சொல்லும் அளவுக்கு இலங்கையில் நடக்கும் சில பல விடையங்கள் நடந்தேறிவருகிறது ! திககொட(மாத்தறையில்) இராணுவ மேஜர் ஒருவர் தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கைக்குண்டை இழுத்து தற்கொலைசெய்துள்ளார். இச் சம்பவம் நேற்றையதினம்(18.09.2012) மாலை இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. 37 வயதுடைய குறிப்பிட்ட இராணுவ மேஜர், திருமணமானவர் என்றும் 2 பிள்ளைகளின் தந்தை என்றும் அறியப்படுகிறது. இவருக்கும் 17 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தான் திருமணமானவர் என்று, அப்பெண் அறிந்ததை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந் நிலையில், அந்த 17 வயது பள்ளி மாணவியை தனது தந்தையுடன் வந்து தன்னைச் சந்திக்குமாறு இராணுவ மேஜர் தெரிவித்துள்ளார். சம்பவ தினமான நேற்று மாலை அம்மாணவியும் அவரது தந்தையும் திககொடவில் வைத்து உரையாடியுள்ளனர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட பலத்த வாக்குவாதத்தை அடுத்து, அங்கே நின்றிருந்த தனது வாகனத்தினுள் ஏறிய மேஜர் தனது கைக்குண்டை அப்படியே எடுத்து, கிளிப்பைக் களற்றி வெடிக்கவைத்துள்ளார். பலத்த சத்தத்துடன் வெடித்த அக்குண்டால், இராணுவ மேஜர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். சம்பந்தப்பட்ட மாணவியையும், அவரது அப்பாவையும் பொலிசார் தீவிர விசாரணக்கு உட்படுத்தியுள்ளனர். இவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்பையில் மேற்கண்ட தகவலைப் பொலிசார் வெளியிட்டுள்ளனர். காதலுக்காக கைக்குண்டின் கிளிப்பைக் களற்றியுள்ளார் சிங்கள இராணுவச் சிப்பாய் ! இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவி எல்லோடும் இவரை நம்பி இருக்கிறார்களே இதனைப் பற்றியாவது ஒரு தடவை யோசித்துப் பார்த்தாரா இந்த இராணுவ அதிகாரி ? என்ன கொடுமையடா சரவணா ! |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
பயணியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த : நடத்துனர், சாரதி (20/06/2013)
|
சினிமா மோகத்தில் இலங்கை மண்ணில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்ப்பெண்ணூக்கு நேர்ந்த கொடுமை (19/06/2013)
|
போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது! (19/06/2013)
|
உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் (19/06/2013)
|
இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை (19/06/2013)
|
கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு (18/06/2013)
|


பயணியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த : நடத்துனர், சாரதி









