![]() |
கள்ளக்காதலியை குளியலறையில் ஒளித்து வைத்த போலீஸ் கணவர் மீது மனைவி புகார்! | ||
| [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர், 2012, ] | ||
சென்னை பரங்கிமலை போலீஸ் குடியிருப்பில் காதலியோடு, உல்லாசமாக இருந்த போலீஸ்காரரை, அவரது மனைவியே கையும், களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை ஆயுதப்படை காவலர் பாலமுருகன்,(வயது 30). இவரின் மனைவி ரேவதி,(வயது25). இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: எங்களுக்கு, 14 மாதங்களுக்கு முன், பழனி கோவிலில் திருமணம் நடந்தது. நான், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறேன். திருமணத்திற்கு பின், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். வயிற்றில், 45 நாட்களான குழந்தை இருந்தது. குழந்தை பிறந்தால் வேலைக்குச் செல்ல முடியாது எனக் கூறி, வற்புறுத்தி குழந்தையை கலைத்தார். எனது நகைகளையும் அடகு வைத்துவிட்டார். மேலும் நகைகள் வாங்கிவரவேண்டும் என்றும் வற்புறுத்தி வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு எனது கணவர் என்னை உச்சகட்ட கொடுமைக்கு ஆளாக்கினார். என்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டார். நான் எனது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டேன். கடந்த 16-ந் தேதி அன்று எனது பெற்றோர் என்னை சமாதானப்படுத்தி பரங்கிமலை போலீஸ் குடியிருப்பில் உள்ள எனது கணவர் வசித்த வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது பகல் 11 மணி இருக்கும். வீடு பூட்டிக்கிடந்தது. அக்கம் பக்கத்தில் வசித்த போலீஸ் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, எனது கணவர் வீட்டுக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். நான் கதவை தட்டினேன். சுமார் அரை மணி நேரம் விடாமல் நான் கதவை தட்டியபடி இருந்தேன். அதன்பிறகு எனது கணவர் கதவை திறந்தார். நானும், எனது பெற்றோரும் வீட்டுக்குள் சென்றோம். அங்கே நான், எனது இதயத்தை நொறுக்கிய காணக்கூடாத காட்சியை கண்டேன். வீட்டு குளியல் அறைக்குள் ஒரு இளம்பெண் ஒளிந்து இருந்தாள். அவளை யார் என்று எனது கணவரிடம் கேட்டேன். இனிமேல் அவள்தான் எனது மனைவி, உன்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று எனது கணவர் பதில் அளித்தார். என்னை விரட்டி, வீதியில் நிற்க வைத்துவிட்டு, எனது கணவர் பட்டப்பகலில், அதுவும் போலீஸ் குடியிருப்பில் தனது காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டது கண்டு, நான் நொறுங்கிப்போனேன். அவரையும், அவரது காதலியையும், பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். போலீஸ் விசாரணையிலும், அந்த பெண்ணையே 2-வது திருமணம் செய்யப்போகிறேன் என்று எனது கணவர் சொன்னார். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, கடந்த 8 வருடமாக நாங்கள் காதலிக்கிறோம். எனது காதலை மறைத்து, ரேவதியை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இப்போது என்னை திருமணம் செய்யப்போவதாக சொல்லி, என்னோடு குடித்தனம் நடத்துகிறார் என்று தெரிவித்தாள். பரங்கிமலை போலீசார், எனது கணவர் போலீஸ்காரர் என்பதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரித்து அனுப்பிவிட்டனர். என்னை வீதியில் தவிக்கவிட்டு, சட்டவிரோதமாக இன்னொரு பெண்ணுடன் வாழும் எனது கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரேவதி தனது புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். புகார் மனு மீது விசாரணை நடத்த, மவுன்ட் உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை (25/05/2013)
|
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி (24/05/2013)
|
தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு ! (23/05/2013)
|
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு (23/05/2013)
|
நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை (23/05/2013)
|
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! (22/05/2013)
|
|
Published news: |
மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! (19/05/2013)
|
கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு (19/05/2013)
|
மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! (19/05/2013)
|
குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!! (19/05/2013)
|
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்! (18/05/2013)
|
தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது (18/05/2013)
|


ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை









