web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தளபதி பரிதி கொலை! புலிகள் நெடியவன் அணி தளபதிகளுக்கு பிரான்ஸ் பொலிஸ் பாதுகாப்பு!

[ சனிக்கிழமை, 10 நவம்பர், 2012, ]
தளபதி பரிதி கொலை! புலிகள்
விடுதலைப்புலிகள் இயக்கத் தளபதி பரிதி பாரிஸில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்த தளபதிகள் மூவர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக, பிரான்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட தளபதி பரிதியும், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்தவர்.

பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் பொலிஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. DCRI (Direction Centrale du Renseignement Intérieur) பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு.

DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் André Beauchamp, ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும், கொல்லப்பட்ட தளபதி ஏற்கனவே பிரான்ஸ் சிறையில் கைதியாக இருந்து தற்போது பெயிலில் உள்ளதால், அவர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், தற்போது கொல்லப்பட்ட பரிதியின் அமைப்பை சேர்ந்த மூவர் தமக்கு உயிராபத்து உள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த கோரிக்கையை தமது பிரிவு கவனிப்பதில்லை எனவும், கோரிக்கையை தாம் police nationale பிரிவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார் André Beauchamp.

விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் பிரான்ஸ் தலைவர் பரிதி கொல்லப்பட்டுள்ளதால், அடுத்த நிலை தலைவர்கள், அதே அச்சுறுத்தல் தமக்கும் உள்ள காரணத்தால் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளார்கள் என்று தெரிகிறது.

விடுதலைப் புலிகள் நெடியவன் அணி வட்டாரங்களில், தமது இரண்டாம் மட்ட தளபதிகள் தாக்கப்படும அபாயம் உள்ளதால், பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார்கள்.
பாதுகாப்பு கொடுக்கப்படுமா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)